search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்"

    டெல்லியில் பழமையான 40 லட்சம் வாகனங்களின் பதிவெண்களை ரத்து செய்துவிட்டதாக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது. #DelhiPollution #SupremeCourt #OldVehiclesDeregisterd
    புதுடெல்லி:

    டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில், 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகள் பழைய பெட்ரோல் வாகனங்களை டெல்லி-என்சிஆர் சாலைகளில் இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தடை விதித்தது.

    ‘தடையை மீறி இயக்கப்படும் பழைய வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும், தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் பற்றிய விவரங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும். பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க வேண்டும்’ எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காற்று மாசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. மாசு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக பேஸ்புக், டுவிட்டரில் தனி பக்கம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதன் வாயிலாக 18 புகார்கள் வந்திருப்பதாகவும் மத்திய மாசுக்கட்டுப்பட்டு வாரியம் கூறியது.

    10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் என மொத்தம் 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவெண்களை, உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பயத்தின் உத்தரவின்படி, ரத்து செய்துவிட்டதாக டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், நவம்பர் 30 முதல் டிசம்பர் 30 வரை டெல்லிக்குள் நுழையும் சரக்கு வாகனங்களை அடையாளம் காண்பதற்காக, 13 நுழைவு வாயில்களிலும் ரேடியோ அதிர்வெண் சாதனம் பொருத்தப்பட உள்ளதாகவும் டெல்லி அரசு கூறியது. #DelhiPollution #SupremeCourt #OldVehiclesDeregisterd
    ×